உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளுக்காக நடைபெற்ற கொரிய மொழிப் புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதில் 3,422 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சைக்கு 3,580 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்ததுடன், மொத்தப் பரீட்சார்த்திகளில் 95.6 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகள் www.slbfe.lk என்ற இணையதளத்தில் மே 27ஆம் திகதி வெளியிடப்படும் என்றும், பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மே 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் பரீட்சை பணியகத்தின் மாகாண அலுவலகங்கள், குடிவரவு வள மத்திய நிலையங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் ஜூன் 06, 07 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன..