இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை தேசிய புலனாய்பு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்ட குறித்த மர்ம நபர், பிரதமர் மோடியைக் கொலை செய்யப் போவதாக ஹிந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இதுபோன்ற மிரட்டல்கள் வழக்கமாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குதான் வரும். ஆனால், என்ஐஏ அலுவலகத்துக்கே தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.