Search
Close this search box.
சமூக வலைத்தளத்தில் வைரலான காணொளியின் உண்மை தன்மை!

அவிசாவளையில் இருந்து கலிகமுவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை பரிசோதிக்கும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் சாரதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய உரையாடலின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, குறித்த காணொளி தொகுக்கப்பட்டுள்ளதாக (Editing) தெரிவித்தார்.

பிந்தெனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

“வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழில் வெவ்வெறு பெயர்கள் இருந்துள்ளன. சாரதியாக மற்றொருவர் இருந்துள்ளார். வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழின் முகவரியும் வேறுபட்டுள்ளன. சாரதி வேறு பகுதியில் வசிப்பவர். இந்த காரணங்களால், வாகனத்தின் உரிமையை மாற்றாதது குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது . நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 5,000 அபராதமும் செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

Sharing is caring

More News