Search
Close this search box.
மின் கட்டணத்தை குறைக்குமாறு சஜித் வேண்டுகோள்!

கனமழை காரணமாக நீர்மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனல வெவ ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், மின்சார அலகொன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு 2 தடவைகள், மின்சார சபையிடம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. என்றாலும் அந்த முன்மொழிவுகள் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

15-20 சதவீதமாக இருந்த நீர்மின் உற்பத்தி மட்டம் இம்மாதம் 20 ஆம் திகதி ஆகும் போது 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் ஒன்றிணைந்து  இந்த நன்மையை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

Sharing is caring

More News