கிளிநொச்சி (Kilinochci) முட்கொம்பன் பிரதேசத்துக்கான சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றையதினம் (22.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முட்கொம்பன் மற்றும் அரசபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், குறித்த கிராமத்திற்கான போக்குவரத்து சேவை சீராக இடம்பெறவில்லை என்பதுடன் ஒரே ஒரு சேவையில் ஈடுபடும் அரச பேருந்து, பாடசாலை விடுமுறை நாட்களில் சேவையில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வரும் அப்பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.