Search
Close this search box.
ஹெலிகொப்டர் விபத்தை அடுத்து ஈரானிய ஜனாதிபதி மாயம்!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அந்த அதிகாரி, மீட்புப் படையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அசர்பைஜான் மற்றும் ஈரானின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் திறப்பு விழாவிற்காக ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள்  சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த ஹெலிகொப்டர் விபத்து  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானிய ஜனாதிபதி  மற்றும்  வெளியுறவு அமைச்சர் Hossein Amirabdollahian உள்ளிட்டோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

“நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை” என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான வானிலை மீட்புப் பணிகளை சிக்கலாக்குகிறது என்று மாநில செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் அனைத்து வளங்களையும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துமாறு ஈரான் இராணுவத்தின் தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்தில் சிக்கியுள்ள ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்காக அந்நாட்டு மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News