Search
Close this search box.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம்..!!

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலோடு  சிறப்பாக இடம் பெற்று வருகின்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின்  வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (20) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாகக இடம்பெற்று வருகின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுடைய வைகாசி விசாக பொங்கல் இன்று அதிகாலை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலே முல்லைத்தீவில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற சீரற்ற காலநிலைமைகளுக்கு மத்தியிலே இன்று காலை வேளையிலேயே மிக அதிகளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்ததை அவதானிக்க கூடியதாக இருக்கின்ற அதே வேளையிலே பல்வேறு இடங்களிலும் இருந்து வருகை தந்து இருக்கின்ற பக்தர்கள் தூக்குக்காவடி காவடி பால் செம்பு கற்பூரச் சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களில் ஈடுபட்டிருப்பதோடு அம்மனுக்கு பொங்கல் பொங்கி படையல் இட்டு தங்களது நேர்த்திகளை செய்து வருகின்றனர் மேலும் வழமைக்கு மாறாக இன்று காலை வேளையிலேயே ஆலயத்திலே அதிகளவான  பக்தர்களை காணக் கூடியதாக இருப்பதோடு பாதுகாப்பு கடமைகளில் விஷேடமாக பொலிசார் ஈடுபடுத்தப்பட்டிருப்பதோடு இன்று இரவு பாரம்பரிய முறைப்படி வளர்ந்து நேர்ந்து பொங்கல் உற்சவம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி பலி!

யாழ். அச்சுவேலி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி புத்தூர் கணம்புலியடி சந்தியில் இன்று(20.05.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், திவாகரன் – சரோஜா என்ற 23 வயதுடைய இளம் யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார். புத்தூர் கணம்புலியடி சந்தியில் விபத்து இடம்பெற்று, வைத்தியசாலைக்கு கொண்டுவரும் முன்னர் யுவதி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யாவுக்கான அடுத்த இலங்கைத் தூதுவர் யார்?

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை தூதரகத்திற்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தூதுவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளதால் தற்போது பரபரப்பாக பேசப்படும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய விவகாரம் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் செஞ்சிலுவை சங்க தலைவர் கூறுகையில் நிலைமை “நல்லதாக” இல்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளான இடத்தை “சில நிமிடங்களில்” அடைவார்கள் என்று ஈரானின் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் Pirhossein Kolivand தெரிவித்துள்ளார். அவசர தரையிறக்கம் நடந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து அவர்கள் சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் நேற்றைய தினம் விபத்திற்குள்ளானது. கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும் நேற்று (19) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அசர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் 9 பேர் பயணித்த ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானது. குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்..!

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வார காலப் பகுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதி குறித்த மாணவர் கையேடு இன்னமும் வெளியிடப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு மாணவர் கையேடு வெளியிடுவது கால தாமதமாகியுள்ளதோடு, கையேட்டை வெளியிடாது மாணவர்களை அனுமதிப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என கூறப்படுகின்றது. மேலும், கையேட்டை அச்சிட்டு வெளியிடுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவை என குறிப்பிடப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை அதிகாரிகளும் தொழிற்சங்க நடவடிக்கையில்..

சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 25,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரி சிறைச்சாலை அதிகாரிகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதன் காரணமாக முழு பல்கலைக்கழக அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்க பேரவையின் பொதுச் செயலாளர் டி சுரஞ்சீவ தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் செஞ்சிலுவை சங்க தலைவர் கூறுகையில் நிலைமை “நல்லதாக” இல்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளான இடத்தை “சில நிமிடங்களில்” அடைவார்கள் என்று ஈரானின் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் Pirhossein Kolivand தெரிவித்துள்ளார். அவசர தரையிறக்கம் நடந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து அவர்கள் சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் நேற்றைய தினம் விபத்திற்குள்ளானது. கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அசர்பைஜான் மற்றும் ஈரானின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் திறப்பு விழாவிற்காக ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள்  சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த ஹெலிகொப்டர் விபத்து  இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அடுத்த வருடம் முதல் முற்றாக தடை செய்யப்படும் பொருள்..!

இலங்கையில் அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்களை முற்றாக தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் லஞ்ச் சீட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பான சட்டப் பணிகளை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கமைய, மக்கும் லஞ்ச் சீட்களை உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதும் சாத்தியமில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். தரமற்ற லஞ்ச் சீட் விற்பனையால் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், லஞ்ச் சீட்களை முற்றிலுமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்…! சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தீவின் மீது அவ்வப்போது (30- 40) kmph வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

பலமான கட்டமைப்பில் செயற்பட்ட விடுதலைப் புலிகள் – மீண்டும் போர் வேண்டாம்..! மஹிந்த

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கின்றோம்.  இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- “மூன்று தசாப்தங்களாக இலங்கையை ஆக்கிரமித்திருந்த பிரிவினைவாத, பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியைடைந்துள்ளன. 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குழுவாக ஆரம்பமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் பிரபல்யமான பயங்கரவாத அமைப்பாக எழுச்சி பெற்றது. தற்கொலை மனிதக் குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையணி என்பனவற்றை விடுதலைப்புலிகள் அமைப்பே உலகுக்கு அறிமுகம் செய்தது. தற்கொலைக் குண்டுகள் அடங்கிய சிறிய ரக படகுகள், இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தக் கூடிய இலகு விமானங்கள் உட்பட ஆயுதங்களைக் கொண்டு வரும் கப்பல்கள் எனப் பலமான கட்டமைப்பில் புலிகள் அமைப்பு செயற்பட்டதை நினைவுகூர வேண்டும். இலங்கை மற்றும் இந்திய அரச தலைவர்கள் இருவர் உட்பட இலங்கையின் சிரேஷ்ட அரச தலைவர்கள் மற்றும் சிவில் மக்கள் உள்ளடங்களாகப் பலரைக் கொலை செய்த விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு வழிகளில் அழைப்பு விடுத்தேன். சகல வழிகளையும் நிராகரித்து விடுதலைப்புலிகள் அமைப்பு தாக்குதலைத் தொடர்ந்ததால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் எதிர்த் தாக்குதலைத் தீவிரமாக முன்னெடுத்தோம். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டி யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். 2009.05.18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து 2009.05.19 ஆம் திகதி காலை வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. நான்காவது ஈழப் போராட்டத்தை தோற்கடித்தது மாத்திரமல்ல விடுதலைப்புலிகள் அமைப்பில் பணயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சக்கணக்கான சிவில் பிரஜைகள் பாதுகாக்கப்பட்டார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்புப் படையணியின் பிரதானிகள் மற்றும் முப்படையினர் ஆகியோருக்கும், நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஐந்தாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி என்ற அடிப்படையில் கௌரவமளிக்கின்றேன். யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கின்றோம். ஆகவே, யுத்தம் பற்றி சிந்திக்கக் கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகின்றார்கள். இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.” – என்றுள்ளது.