யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பாராளுமன்ற மைதானத்தில் யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் நாள் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
அதற்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் பொல்துவ சந்தி மற்றும் கெயின்ஹாம் சந்தியிலிருந்து பாராளுமன்ற வீதியின் நுழைவுப் பாதை மற்றும் வெளியேறும் பாதை மூடப்படும்.
மேற்கண்ட வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.