போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் எதிர்வரும் சனிக்கிழமை (18)மாலை 5 மணிக்கு வவுனியப நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வன்னி மக்களுக்கான ஒன்றியம், வன்னி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிறந்த இலங்கைக்கான மன்றம், காணாமலாக்கப்பட்டவர்களின் பிள்ளைகளின் சங்கம், உலகத்தமிழர் பேரவை, தர்மசக்தி ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வம மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.