Search
Close this search box.
உயிரிழந்த பெண்ணை உயிர் பெறச்செய்த கிராம உத்தியோகத்தர்!

உயிரிழந்த பெண் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தேக்கவத்தை கிராம உத்தியோக பிரிவில் கடமையாற்றும் 52 வயதான கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கமைய, இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது

வேறொரு பிரிவில் கடமையாற்றும் போது உயிரிழந்த பெண் ஒருவரின் பெயரில் அவர் உயிருடன் இருப்பதாக குறித்த கிராம உத்தியோகத்தர், மௌலவி ஒருவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கடிதத்தை பயன்படுத்தி களுத்துறை பிரதேசத்தில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றிற்கு போலி பத்திரம் தயாரித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், விசாரணையில், குறித்த பெண்ணை தனக்குத் தெரியாது எனவும் குறித்த பெண் கேட்டதையடுத்து இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News