எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆனால் அது தொடர்பான விவாதத்தை நடத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இன்று மற்ற இரண்டு முக்கிய வேட்பாளர்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.
தயவுசெய்து அந்த விவாதத்தை நடத்துங்கள். ஏனெனில் இந்த விவாதத்தில் இருவரும் பங்கு பெறாத போக்கே காணப்படுகிறது.
நான் உண்மையில் ஜனாதிபதியிடம் பொது விடுமுறையை அறிவித்து இந்த விவாதத்தைப் பார்க்குமாறு இலங்கை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கோரினேன்.
இவர்கள் இருவரின் விவாதத்தைப் பார்த்து எப்படி நாட்டைக் கட்டியெழுப்ப போகிறார்கள் என்று பார்ப்போம்.
ஏனெனில் சவால்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப போகிறார்கள் என முதலில் பார்க்க வேண்டும்.
இது ஒரு வாய்ச்சவடாலே.
இதை செய்ய முடியாது என்பது இரு தரப்புக்கும் தெரியும்.
ஒருவர் கடும் சிங்களத்தில் பேசுகிறார்.
மற்றையவர் கடும் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
இருவரும் பேசுவது இருவருக்குமே புரியாது.
வாய்ச்சவடாலின்றி செயலில் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.