அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், பால்ட்டிமோரில் சரக்குக் கப்பல் மோதியதால் சேதமடைந்த Francis Scott Key பாலம் வெடிவைத்து முழுமையாக தகா்க்கப்பட்டது.
இலங்கையை நோக்கி டாலி (Dali) என்ற சரக்குக் கப்பல் பால்டிமோா் நகரிலுள்ள படாஸ்ப்ஸ்கோ (Patapsco) ஆறு வழியாக கடந்த மாா்ச் மாதம் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதியது. இதன்போது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.
இந்த விபத்தின் போது, ஆற்றில் மூழ்கிய 8 பேரில் இருவர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டனர். பாலத்தின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கப்பலில் இருந்த இந்தியப் பணியாளா்கள் முன்கூட்டியே அதிகாரிகளை எச்சரித்ததால், பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
இதனையடுத்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த Francis Scott Key பாலத்தின் இடிபாடுகளை அகற்றி, எஞ்சிய பகுதிகளை வெடி வைத்து தகர்த்துள்ளனர்.