ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை மக்கள் நினைவு கூருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும்.
இந்நிலையில் இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த வரும் என்றும் இல்லாதவாறு கடந்த இரு தினங்களாக உலங்கு வானூர்தி வானை சுற்றி நோட்டமிட்ட வண்ணம் இருக்கின்றது.
இதனால் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஒரு வித அச்சத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.