Search
Close this search box.
அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய நபர் கைது!

அஹுங்கல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய நபர் ஒருவர் கொஸ்கொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்கொட, துவமோதர பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின் அதிகாரிகள் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் கடந்த 8 ஆம் திகதி அஹுங்கல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய ‘அதரே’ என்ற புனைப்பெயர் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரிடமிருந்த 1,150 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கையடக்கதொலைபேசியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஸ்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Sharing is caring

More News