வவுனியா மரக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா 12.05.2024 இடம்பெற்றது
இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் பனை மரத்தின் உற்பத்திப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் கலை நிலா கலையகத்தினால் “குளக்கரையை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் நாடகம் ஆற்றுகையும் இடம்பெற்றிருந்தது சுயாதீன தமிழ் இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பெருமளவான இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டு கோடையின் தாகத்தை பனை நுங்கு மூலம் குறைத்துசென்றனர்