யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபரிடமிருந்து 3 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.