Search
Close this search box.

மீதி வரிப்பணத்தை அறவிட நடவடிக்கை!

அரச நிறுவனங்களில் அறவிடப்பட வேண்டிய மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். “உலகில் ஆகக் குறைந்த வருமானம் கிடைக்கப்பெற்றாலும் ஏதோ ஒரு இடத்திற்கு வந்து நாட்டைக் கொண்டு செல்கிறோம். அறவிடப்பட வேண்டியவற்றை அறவிடாது புதியவற்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக எதிர்க் கட்சியினர் தற்போது சொல்ல முயற்சிக்கின்றனர். அது ஒரு தர்க்கமாகும். ஆம், அறவிடப்பட வேண்டிய மீதி வரித்தொகை அரசாங்கமாக தெளிவுபடுத்த  வேண்டும் என்றார் இராஜாங்க அமைச்சர். முதலாவதாக எமது நாட்டின் வரிச் சட்டத்தில் காணப்படும் மேன்முறையீட்டு உரிமை. அது முழு உலகத்திலும் உள்ளது. அரசாங்கத்தினால் குத்தகை செலுத்துமாறு குறிப்பிட்டால், சட்டத்தின் முன்னால் சென்று மேன்முறையீடு செய்ய அரசாங்கமாக இருந்தாலும் எங்களால் இதனை செலுத்த முடியாது என்று சட்டத்தால் நீதிமன்றத்திடம்  செல்ல மக்களுக்கு உரிமை உள்ளது. அவற்றில் உள்ளவை தான் தற்போது அதிகமாகக் காணப்படுகின்றது. இரண்டாவது அரசாங்க நிறுவனங்களினால் செலுத்தப்பட வேண்டிய வரி. எந்தவொரு மீதியாக வரியை அறவிடுவதற்கு அரசாங்கத்திற்குக்  காணப்படும் சகல அதிகாரங்களும் இந்த யுகத்தைப் போல் இன்னொரு யுகம் இல்லை”. என்றும் இதன்போது இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் பதற்றம்: இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை வீரர் பலி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தார். இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (25) அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர். இந்தியப் மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்தபோது இந்திய மீனவர்களுக்கும் கடற்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதன்போது உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும், மீனவர்கள் வந்த படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமையேற்பு!

இலங்கை இராணுவத்தின் 64 வது இராணுவ பதவிநிலைப் பிரதானியாக விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, இராணுவத் தலைமையகத்தில் நேற்று (24) உத்தியோகபூர்வமாக கடமையேற்றார். 1969 செப்டெம்பர் 16 ஆம் திகதி பிறந்த மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே,  குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளதுடன் 1988 ஜூலை 26 ஆம் திகதி 31 ஆம் இலக்க பாடநெறியின் ஊடாக இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்டார். அவர் 1990 ஒக்டோபர் 5 ஆம் திகதி விஜயபாகு காலாட் படையணியில் அதிகாரவாணை கொண்ட அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பட்ட படிப்புகளை முடித்துள்ள இவர் இராணுவத்தில் 35 வருட சேவையை முடித்துள்ளார், தனது பணியில் பல கட்டளை பதவிகள், பணி நிலை மற்றும் ஆலோசனைப் பதவிகளை வகித்துள்ள அனுபவமும் திறமையும் கொண்ட சிறந்த அதிகாரியாவர். பயங்கரவாதத்திலிருந்து தாய்நாட்டை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக பங்களிப்பு வழங்கிய சிரேஷ்ட அதிகாரி, நான்கு முறை ரண விக்ரம பதக்கத்தையும், ரண சூர பதக்கத்தையும் பெற்றுள்ளார். மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரி ஆவார், மேலும் இவர் தனது புதிய பதவியினை ஏற்பதற்கு முன்னதாக மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

நாட்டில் இன்றும் கனமழை – கடலில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தளை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசந்துறைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.