Search
Close this search box.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தூண்டிய மேற்கத்திய நாடுகள் – வலுக்கும் எதிர்ப்பு!

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை “தூண்டியது” என்று சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியதற்காக சீர்திருத்த பிரித்தானிய தலைவர் Nigel Farage விமர்சிக்கப்பட்டார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை மேற்கத்திய நாடுகள் தூண்டிவிட்டன என்ற தனது கூற்றுகளை இரட்டிப்பாக்கி, மன்னிப்பு கேட்க மறுத்து, தான் ஒரு “மன்னிப்பு அல்லது புடினின் ஆதரவாளர்” அல்ல என்று வலியுறுத்தினார். ரிஷி சுனக் மற்றும் கெய்ர் ஸ்டார்மர் Nigel Farage கருத்துகளை கண்டித்தனர், பிரதம மந்திரி இது “புடினின் கைகளில் விளையாடுகிறது” என்று கூறினார் மற்றும் தொழிலாளர் தலைவர் அதை “அவமானம்” என்று விவரித்தார்.

மொட்டு கட்சியை ரணிலிடம் ஒப்படைக்க வேண்டும் : ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டு

ராஜபக்சக்கள், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதற்கு மொட்டு கட்சியின் ஆதரவினை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ராஜபக்சவினர் தேர்தல் பிரசாரப் பணிகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சியின் பொருளாதார கொலையாளிகள் என சிலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவ்வாறான நபர்களுடன் இருப்பது, ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்மறையானதாக அமையக் கூடும் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை தாம் ரணிலிடம் கூறிள்ளதாகத் தெரிவித்துள்ளார். தங்களது பாசறை வெற்றியீட்ட வேண்டுமாயின் பிரசாரத்திலிருந்து ஒதுங்கியிருக்க ராஜபக்சக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜித குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தொடரும் மழைவீழ்ச்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.