எக்ஸ் செயலியில் கட்டண முறையில் வழங்கப்படும் எக்ஸ் பிரீமியம் கட்டண முறை பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்க உள்ளதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.இந்த விடயத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவிட்ட பதிவின் படி, “2500 க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட அனைத்து எக்ஸ் கணக்குகளுக்கும் இலவசமாக பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும்.
அத்துடன் 5000 க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட கணக்குகளுக்கு பிரீமியம் பிளஸ் இலவசமாகப் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.