ஹொரோயின் போதைப்பொருள் ,கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ரவைகள் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை தனமல்வில சர்வோதய மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
சர்வோதய வீதி தனமல்வில பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனமல்வில பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது 6670 மில்லி கிராம் ஹொரோயின் போதைப்பொருள் , 40 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் சந்தேக நபரை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.