வவுனியா வைத்தியசாலைக்கு (District General Hospital Vavuniya) விரைவில் வருவேன் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளதுடன், அங்கு முன்னர் பல விடயங்கள் இடம்பெற்றதாகவும் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் அர்ச்சுனா சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.சுகுணன் வவுனியா வைத்தியசாலைக்கு வாருங்கள் என சமூக ஊடகத்தில் பதில் அளித்திருந்தார்.
குறித்த பதிலுக்கு விளக்கமளித்து காணொளியொன்றை சமூக வலைத்தளங்களில் வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீங்கள் கூப்பிட்டு வராமல் இருப்பது எப்படி. வவுனியா வைத்தியசாலைக்கு கட்டாயம் வருவேன். அங்கும் நிறைய விடயங்கள் முதலே நடந்திருக்கிறது கட்டாயம் வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.