Search
Close this search box.
அதிகரிக்கும் காணி பிரச்சினை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் காணப்படும் பெரும்பாலான நீதிமன்றங்களில் நிலம் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”காணி பிரச்சினை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.

நிலம் தொடர்பான வழக்குகளை தீர்க்க பல ஆண்டுகளாக மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் காணி அமைச்சர்களும் இருந்தனர். ஆனால் அவர்களால் மக்களின் காணி பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை.

இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதி உறுமய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.

குறைந்த பட்சம் இந்த பிரதேசத்தில் இருக்கும் ஜே.வி.பி.யின் தலைவரால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இந்த ரஜரட்ட பிரதேசத்தில் இருந்துதான் நாட்டுக்கு அரிசி வழங்கப்படுகிறது.

2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொரகஹகந்த திட்டத்தில் இருந்தும் ரஜரட்டவுக்கு இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.

எனவே ரஜரட்ட பிரதேசத்துக்கு நீரைப் பெற்றுக்கொடுக்கும் அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News