தமிழ்நாட்டில் ஒரு சாலையில் அரச மரம் வேரோடு பிடுங்கப்பட்டபோது, அதன் அடியில் ஒரு பழமையான கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.இச் சம்பவம் ஒரு ஆச்சரியமானதாகவே பார்க்கப்படுகிறது.இது குறித்து மேலும் தெரியவருகையில் அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடம் முன் இறங்கு தளம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த இடத்தில் இறங்கு தளம் அமைக்க இடையூறாக காணப்பட்ட 65 ஆண்டுகள் பழமையான அரச மரம் மற்றும் 25 ஆண்டுகள் பழமையான சேவல் கொண்டை பூ மரம் ஆகிய 2 மரங்களை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதில் ஆச்சரியம் என்னவென்றால், 12 அடி அகலமுள்ள அரசமரத்தை அதிகாரிகள் வெட்டியபோது, மரத்தின் அடியில் ஒரு பழமையான கிணறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
40 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றின் குறுக்கே 2 ராட்சத இரும்பு கம்பிகள் இருந்தது.இந்த கிணற்றின் ஓரம் வளர்ந்த அரச மரம், கிணற்றையே மூடிவிட்டது என்பது தெரிந்தது.இதற்கமைய கிணற்றில் தற்போது தண்ணீர் இருப்பதால் பலரும் கிணற்றை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.