எதிர் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகள போட்டிகளில் முதலிடம் பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை வழங்கிவைப்பதற்கு உலக தடகள சம்மேளனம் தீர்மானித்துள்ளது.உலக தடகள சம்மேளனம் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் விளையாட்டு சம்மேளனம் என்ற பெருமையை பெறுகின்றது.
2024-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பெரிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.தங்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகை இலங்கை நாணயத்தில் சுமார் 15,000,000 ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.மேலும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கும் 2028 முதல் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.