Search
Close this search box.

அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட பாதுகாப்பு!!

பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மதிப்பாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. பொலிஸ் தலைமையகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சுப் பதவிகளை வகிப்பதால் சிலருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. எனினும் அமைச்சுப் பதவிகளை வகிக்காத சந்தர்ப்பங்களில் அவ்வாறான அச்சுறுத்தல்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த மதிப்பாய்வுகளின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் நீண்ட வரிசையில் நின்ற மக்கள்!!

முன்னர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் சதொச(sathosa) மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளைகளில் நீண்ட வரிசையில் நின்றனர். ஆனால் பொருளாதார நெருக்கடி(economic crisis) சற்று தளர்ந்து பொருட்கள் வந்த பின்னர் அந்த வரிசை அற்றுப்போனது. தற்போது மற்றுமொரு வரிசைக்கு மக்கள் தயாராகிவிட்டனர். ஆம் அதுதான் தேங்காய் வரிசை. வீட்டின் சமையல் கூடத்திலிருந்து தேநீர்கடை வரை நாளாந்தம் பயன்படுத்தும் பொருள் தேங்காய் ஆகும். எனவே அது அனைவருக்கும் முக்கியமான அத்தியாவசிய பொருளாகும். அந்த வகையில் தற்போது அதனை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசை ஒன்றில் நின்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதுதான் பத்தரமுல்லை தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு சொந்தமான “கப்துருபாய” கடையில் நேற்று (06) காலை, தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் குழுவொன்று நீண்ட வரிசையில் நின்று தேங்காய்களை பெற்றுள்ளது. இதேவேளை தேங்காயின் விலை மேலும் உயரும் என தெரிவிக்கப்படுகிறது. தேங்காய் அறுவடை குறைந்ததாலும், தேங்காய் தொடர்பான ஏற்றுமதிக்கு தேங்காய் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், தேங்காய் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தரைக் கோடி ரூபா பண மோசடி குற்றச்சாட்டில் வைத்தியர் கைது!

தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர், 5கோடி 50 இலட்சம் ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கோனஹேன, வேபட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய வைத்தியரே கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.